Ticker

6/recent/ticker-posts

16 கோடியை எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தந்த உலக நாயகன்

உலக நாயகன் கமலஹாசன், இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காமலிருந்தார். 
சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியின் போது, தான் என்றாவது விளம்பர படங்களில் நடிக்க நேர்ந்தால், அதில் கிடைக்கும் வருவாயை ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக செலவழிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்படத்தக்கது. 

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்.
அண்மையில் கமலஹாசன், போத்தீஸ் விளம்பரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனம் தயாரித்துள்ள விளம்பரத்தில் நடித்துள்ளார் உலக நாயகன்.

இந்த விளம்பரங்களில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் முழுவதையும் அப்படியே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். 
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் 'பெற்றால்தான் பிள்ளையா?' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
விளம்பரங்களில் நடிக்காமல் பல கொடிகளை இழந்தவர் கமல் ஹாசன். இந்த விளம்பரதின் மூலமாக கிடைத்த 16 கோடியை எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தந்து, தான் சொன்ன வாக்கைக் நிறைவேற்றிய கமல் தான் உலகநாயகன் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.

வாழ்க உலகநாயகன். வாழ்க நற்பணி.

Post a Comment

0 Comments