மணி ரத்னம் இயக்கும் புதிய
படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர்
நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் முதலில்
ஒப்பந்தமாகியிருந்த நடிகர்களில் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
துல்கர் சல்மான் மலையாளப் படங்களில் பிஸியாக உள்ளார் என்பதால் அவருக்குப் பதிலாக வேறு நடிகரைத் தேர்வு செய்துள்ளார் மணி ரத்னம்.
‘கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணி ரத்னத்தைச் சந்தித்தார். அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். துல்கருக்குப் பதிலாக நானி நடிக்கக்கூடும்’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத்
தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன.
0 Comments
Comment is awaiting for approval