1982ல் வெளியான
‘காந்தி’ திரைப்படத்தை இயக்கிய பிரபல பிரட்டிஷ் இயக்குனர், நடிகருமான ரிச்சர்ட் அட்டென்பரோ [Richard Attenborough] நேற்று
காலமானார். அவருக்கு வயது 90.
ரிச்சர்ட் சாமுவேல் அட்டென்பரோ, ஆகஸ்ட் 29, 1923 ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் பிறந்தார். தந்தை பெட்ரிக் லெவி அட்டென்பரோ. தாய் மேரி அட்டென்பரோ.
நாடகங்களில் நடித்து வந்த அட்டென்பரோ, 1942 ல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் - 1947 ல் வெளியான ' ப்ரைடொன் ராக்' [Brighton Rock].
பிறகு பல்வேறு பிரிட்டிஷ் படங்களில் நடித்து வந்த அவர் 1963 ல் 'தி கிரேட் எஸ்கேப்' [The Great Escape] படம் மூலமாக ஹாலிவுட்டில் கால் பதித்தார்.
அட்டென்பரோவை புகையின் உச்சிக்கு கொன்று சென்ற படம் 1982 ல் வெளியான மகாத்மா காந்தியின் வழக்கை வரலாறு - 'காந்தி ' [Gandhi].
பெண் கிங்க்ஸ்லே இப்படத்தில் காந்தியாக நடித்தார். 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை குவித்தது.
இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற இவர், பல ஆங்கிலப்
படங்களை தயாரித்து, இயக்கி, நடித்ததுடன் பல்வேறு திரைப்பட விழாக்களின்
நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும்
இடம்பெற்றிருந்தார்.
1979 ல் வெளியான 'தி ஹயுமன் பெக்டர் ' [The Human Factor] படத்திற்வந்த கு பிறகு நடிப்பை தவிர்துவந்த அட்டென்பரோவை மீண்டும் நடிக்கவைத்த பெருமை ஸ்டீவென் ஸ்பீல்பர்கை சேரும். 1993 வெளியான 'ஜூராசிக் பார்க் ' [Jurassic Park] படத்தில் அட்டென்பரோ நடித்தார்.
சுமார் 60 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த ரிச்சர்ட்
அட்டென்பரோ, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான
நல்லெண்ணத் தூதராகவும் தொண்டாற்றி இருக்கிறார்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷன்’, பிரிட்டனின் உயரிய
‘லார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்ற ரிச்சர்ட்
அட்டென்பரோ, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
1 Comments
A great Director and Actor. I liked 'The Great Escape' and 'Gandhi'
ReplyDeleteComment is awaiting for approval