பெர்னார்ட் ஷா எனும் பிரிட்டனின் பிளாட்டோ பிறந்த தினம் இன்று (ஜூலை 26).
நக்கல்,நையாண்டி,சமூகத்தைப்பற்றிய பார்வை என்று பின்னி எடுத்த அவரின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது. வறுமை தான் ஆரம்ப கால வாழ்க்கையில் அவருக்கு இருந்த பரிசு. நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.
மேடை ஏறி பேசவும் முயற்சிகள் செய்தார்; திக்கிப்பேசி மேடையை விட்டு இறங்கிய காலங்கள் உண்டு. விடாமல் கண்ணாடி முன் பார்த்து,தெருக்களில் தனியாக பேசிப்பேசி பயிற்சி செய்தார். மேடையில் அதற்கு பின் அவர்தான் ராஜா.
இசை விமர்சனங்களில் குதறி எடுத்து விடுவார். ஒரு இசைக்கலைஞரை “நீயெல்லாம் ஏன் இசைக்கிறாய் ? கோலிகுண்டு விளையாடப்போ ” என்கிற அளவுக்கு எல்லாம் காய்ச்சி எடுத்து இருக்கிறார்.
எழுதி குவித்தார். கம்யூனிச சித்தாந்தங்களை உள்வாங்கி மக்களின் துன்பங்களை எழுத்தில் நாடகமாக வடித்தார். அழுது வடிகிறது என்று தூக்கி எறிந்தார்கள் . ஃபால்பினிசம் மனிதரை கவர்ந்தது. பெரிய எழுச்சி என்பதை விட படிப்படியாக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்பினார். பொங்கி வழியும் நகைச்சுவைக்கு நடுவில் கருத்துக்களை அழகாக கோர்த்து நாடகங்கள் எழுதினார்.
அவர் உண்மையில் அயர்லாந்து பகுதியை
சேர்ந்தவர். ஆங்கிலத்தில் நாங்கள் தான் அபாரமான உச்சரிப்பு கொண்டவர்கள்
என்று கருதிய இங்கிலாந்து வாசிகளை நையாண்டி செய்வது போல நாடகம் எழுதினார்.
இங்கிலாந்தின் உலகப்போர் வாசத்தை விமர்சித்து எழுதினார். மக்கள்
தேசத்துரோகி என்று குறித்தார்கள். இவர் நொந்து போனார். ஜோன் ஆஃப் ஆர்க்
எனும் வீரப்பெண்மணியை இங்கிலாந்து தேசத்தவர் திட்டமிட்டு கொன்றதாக வரலாறு
சொன்ன பொழுது அவரவரின் பார்வையும் சரியே என்கிற தொனியில் நாடகம் எழுதினார்.
அது அவருக்கு நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருதை வாங்கித்தந்தது.
இன்றைக்கும் அது ஒரு சாதனை
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கால் செய்தார்கள்,”உங்களுக்கு நோபல் பரிசு ஷா ” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்கு கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை ;”அது போன வருடம் எழுதியது,உயிருக்கு தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்கு கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ள போகவே இல்லை. வந்த பணத்தை இலக்கிய பணிகளுக்கு கொடுத்து விட்டார்
“ஷேக்ஸ்பியரை விட எனக்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதிகம் தெரியும் “என்றார் அவர். அது உண்மையே;அதே போல அவரை விட என் எழுத்து மேலானது என்றும் சொல்வார்.
பல ஷேக்ஸ்பியர் காதலர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரு விழாவுக்கு அழைத்தார்கள். ஷா பல வரிகளை சீரியஸ் ஆன முகத்தோடு சொல்ல யாரும் கைதட்ட வில்லை. முடிந்ததும் ஷா,”இதுவரை நான் பேசியவை ஷேக்ஸ்பியரின் வசனங்கள்” என்று விட்டு கம்பீரமாக இறங்கினார்.
“என்னுடைய புத்தகங்களை பாடமாக வைத்து பிள்ளைகளை சாகடிக்காதீர்கள்,அப்புறம் ஷேக்ஸ்பியர் போல என்னையும் அவர்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்ற நல்லவர் அவர்
ஷாவின் சில பிரபலமான வாசகங்கள் உங்களுக்காக :
* வாழ்க்கை உங்களை கண்டடைவது இல்லை; உங்களை படைத்துக்கொள்வது
* முயற்சி செய்து தவறுகளால் நிறைந்த வாழ்க்கை மதிப்புக்குரியது மட்டுமல்ல,எதுவுமே செய்யாத வாழ்க்கையை விட பயனுள்ளதும் கூட
* பலர் பிறப்பதற்கும்,புதைப்பதற்கும் நடுவில் மரித்துப்போகிறார்கள்
* பன்றிகளோடு மல்லுயுத்தம் செய்யாதீர்கள். நீங்கள் அழுக்காவீர்கள்; பன்றிகள் அதை ரசிக்கவும் செய்கின்றன
* நீங்கள் இருக்கின்றவற்றை பார்த்து ,”ஏன் இப்படி ?”என்று புலம்புகிறீர்கள், நான் இல்லாத விஷயங்களை பற்றி கனவுகள் கண்டு,”ஏன் இப்படி இருக்க கூடாது ?”என்று கேள்வி எழுப்புகிறேன்
- பூ.கொ.சரவணன்
நன்றி : ஆனந்த விகடன்
நக்கல்,நையாண்டி,சமூகத்தைப்பற்றிய பார்வை என்று பின்னி எடுத்த அவரின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது. வறுமை தான் ஆரம்ப கால வாழ்க்கையில் அவருக்கு இருந்த பரிசு. நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.
மேடை ஏறி பேசவும் முயற்சிகள் செய்தார்; திக்கிப்பேசி மேடையை விட்டு இறங்கிய காலங்கள் உண்டு. விடாமல் கண்ணாடி முன் பார்த்து,தெருக்களில் தனியாக பேசிப்பேசி பயிற்சி செய்தார். மேடையில் அதற்கு பின் அவர்தான் ராஜா.
இசை விமர்சனங்களில் குதறி எடுத்து விடுவார். ஒரு இசைக்கலைஞரை “நீயெல்லாம் ஏன் இசைக்கிறாய் ? கோலிகுண்டு விளையாடப்போ ” என்கிற அளவுக்கு எல்லாம் காய்ச்சி எடுத்து இருக்கிறார்.
எழுதி குவித்தார். கம்யூனிச சித்தாந்தங்களை உள்வாங்கி மக்களின் துன்பங்களை எழுத்தில் நாடகமாக வடித்தார். அழுது வடிகிறது என்று தூக்கி எறிந்தார்கள் . ஃபால்பினிசம் மனிதரை கவர்ந்தது. பெரிய எழுச்சி என்பதை விட படிப்படியாக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்பினார். பொங்கி வழியும் நகைச்சுவைக்கு நடுவில் கருத்துக்களை அழகாக கோர்த்து நாடகங்கள் எழுதினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4ZWgfahOBGkqWhUfWkWHvzyEzqzguG5Gqv6YA5mqBSoh6lnV8WnRUsHTr8ROQeHXnT_4-e8azE3t5gNcV-lCMIInZa4kNLmrL_DykwojJzbhBNfZ_Clyejc8j0G6kmsU8zEDvlCZwR30/s1600-rw/George_Bernard_Shaw_1925.jpg)
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கால் செய்தார்கள்,”உங்களுக்கு நோபல் பரிசு ஷா ” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்கு கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை ;”அது போன வருடம் எழுதியது,உயிருக்கு தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்கு கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ள போகவே இல்லை. வந்த பணத்தை இலக்கிய பணிகளுக்கு கொடுத்து விட்டார்
“ஷேக்ஸ்பியரை விட எனக்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதிகம் தெரியும் “என்றார் அவர். அது உண்மையே;அதே போல அவரை விட என் எழுத்து மேலானது என்றும் சொல்வார்.
பல ஷேக்ஸ்பியர் காதலர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரு விழாவுக்கு அழைத்தார்கள். ஷா பல வரிகளை சீரியஸ் ஆன முகத்தோடு சொல்ல யாரும் கைதட்ட வில்லை. முடிந்ததும் ஷா,”இதுவரை நான் பேசியவை ஷேக்ஸ்பியரின் வசனங்கள்” என்று விட்டு கம்பீரமாக இறங்கினார்.
“என்னுடைய புத்தகங்களை பாடமாக வைத்து பிள்ளைகளை சாகடிக்காதீர்கள்,அப்புறம் ஷேக்ஸ்பியர் போல என்னையும் அவர்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்ற நல்லவர் அவர்
ஷாவின் சில பிரபலமான வாசகங்கள் உங்களுக்காக :
* வாழ்க்கை உங்களை கண்டடைவது இல்லை; உங்களை படைத்துக்கொள்வது
* முயற்சி செய்து தவறுகளால் நிறைந்த வாழ்க்கை மதிப்புக்குரியது மட்டுமல்ல,எதுவுமே செய்யாத வாழ்க்கையை விட பயனுள்ளதும் கூட
* பலர் பிறப்பதற்கும்,புதைப்பதற்கும் நடுவில் மரித்துப்போகிறார்கள்
* பன்றிகளோடு மல்லுயுத்தம் செய்யாதீர்கள். நீங்கள் அழுக்காவீர்கள்; பன்றிகள் அதை ரசிக்கவும் செய்கின்றன
* நீங்கள் இருக்கின்றவற்றை பார்த்து ,”ஏன் இப்படி ?”என்று புலம்புகிறீர்கள், நான் இல்லாத விஷயங்களை பற்றி கனவுகள் கண்டு,”ஏன் இப்படி இருக்க கூடாது ?”என்று கேள்வி எழுப்புகிறேன்
- பூ.கொ.சரவணன்
நன்றி : ஆனந்த விகடன்
0 Comments
Comment is awaiting for approval