சென்ற வருடம் திரை உலகில் தனது 50 வது வருடத்தை கொண்டாடிய நடன கலைஞர் ரகுராம் மாஸ்டர், நேற்று காலமானார். அவருக்கு வயது 64. நேற்று காலை 11:45 அளவில் தன் மனைவியுடன் பேசிகொண்டிருந்த ரகுராம் மாஸ்டர் [Raghuram Master] திடிரென இறந்தது பெரும் அதிர்ச்சி தகவல்.
தன் திரை உலக வாழ்வில் 1500 படங்களில், வெவேறு மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். எல்லா உச்ச நட்சதிரங்கள் மற்றும் இயக்குனர்களுடன் பனி புரிந்திருக்கும் ரகுராம் அவர்கள் கடைசியாக பணியாற்றிய படம் இன்னும் தராகி கொண்டிருக்கும் வசந்த பாலனின் காவிய தலைவன்.

கதகளியில் பயிற்சி பெற்று பின்பு பரதநாட்டியத்தை, கே ஜே சரச அவர்களிடம் பயின்றார். 1963ல் எம் ஜி ஆர் படத்தில் உதவி நடன இயக்குனர் ஆகா பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. 1974 ல் தனியாக நடன இயக்குனர் ஆகா பணிபுரிய ஆரம்பித்தார்.
ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜா, மகள்கள் சுஜா மற்றும் காயித்திரி மற்றும் குடும்பத்தினற்கு சோகம் கலந்த இரங்கல்.
0 Comments
Comment is awaiting for approval