முதன் முறையாக என்னுடைய இந்த ப்லொகில் தமிழில் எழுதுகிறேன். பெங்களூரில் வளர்ந்து, கன்னட பள்ளியில் பயின்றதால் தமிழை முறையாக கற்கவில்லை. என்றாலும் எனது மாமாவின் உதவியாலும், எனது சுய முயற்சியாலும் சிறு வயதினிலே தமிழை படிக்க கற்று கொண்டேன். ஆனால் எழுதுவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைக்கததால் தமிழை எழுதுவதில் எனக்கு கஷ்டம். பல எழுத்து பிய்ழைகள் ஏற்படும். அதனால் எழுதுவதில் கொஞ்சம் தயக்கம். அனால் நன்றாக படிக்க தெரியும்.
நான் இந்த ப்லோகை ஆரமித்த பொயுது வெறும் ஆங்கிலத்தில் எழுதி வந்தேன். பிறகு இதில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்த பொயுது பிற மொழிகளிலும் எழுத முடியும் என்று தெரிந்தது. அதனால் கன்னடத்தில் எழுத ஆரம்பித்தேன். கன்னடம் நன்றாக எழுத படிக்க தெரியும் என்பதால் மற்றும் என் என்னகளை அந்த மொழியில் சுலபமாக முன் வைக்கலாம் என்பதால் கன்னடத்தில் பல பதிவுகளை எழுதி வருகிறேன்.
தமிழிலும் எழுத வேண்டும் என்பது பல் நாள் கனவு. நேரம் இன்மையும் , அலட்சியமும் இத்தனை நாள் என்னை தமிழில் எழுதவிடாமல் தடுத்து வந்தன. இனிமேல் ஆவது என் எண்ணங்களை, விருப்பங்களை, வேருப்ப்களை, பல தர பட்ட விஷயங்களை விவாதிகா வேண்டும் என்ற முயற்சியே இந்த ப்லோகின் நோக்கம்.
என் ப்லோகை அதிகாமாக யாரும் படிப்பதில்லை என்றாலும் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பு இது என்பதால், நேரம் கிடைத்த போதெல்லாம் எழுதிவருகிறேன். ஏதேனும் தப்பு இருந்தால் திருத்துமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி இணையத்திற்கு.
0 Comments
Comment is awaiting for approval