சமூக வலைதளமான டுவிட்டரில் (சுட்டுரை) நடிகர்
கமல்ஹாசன் (@ikamalhaasan) குடியரசு தினமான இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.
இதையடுத்து, ஒரு மணி நேரத்தில் சில ஆயிரம் பேர் இணைந்தனர். மேலும், அவரை
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரவு வரை அதிகரித்துகொண்டே சென்றது.
இளையராஜா இசையில், தேசிய கீதத்தை கமல்ஹாசனே பாடி பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் வருகையை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் வரவேற்று, கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார்.
"டுவிட்டர் நிகழ்வுகளில் மகிழ்ச்சியான தருணங்களில் இன்று (ஜன. 26) முக்கியமானதாகும். எனது மதிப்புமிக்க நபர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். ஐ லவ் யூ அப்பா' என்று ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments
Comment is awaiting for approval