Ticker

6/recent/ticker-posts

கமல் ஹாசன் - தலாய் லாமா சந்திப்பு

உலகநாயகன் கமல் ஹாசன் [Kamal Haasan] , திபெத் நாட்டு புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை [Dalai Lama] சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். கமலுடன் நடிகை கெளதமியும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பை பற்றி கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:



இன்று  காலை தலாய் லாமாவை சந்தித்தேன்.

அவரது இணக்கத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை. காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை.

நான் பகுத்தறிவாளன். எனவே, இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை. எனினும் இந்தச் சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.

எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த அகிம்சை என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்.

அகிம்சையின் பால் எனக்குமிருக்கும் நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்தத் திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.

அறிமுகம் இல்லாத அந்நியமான எங்களுடன் நேரம் செலவழிப்பதை அவர் விரும்பி உற்சாகத்தோடு உரையாடினார்.

அது எனக்கு 2000 ஆண்டுகள் பழமையான சமணர் கவிதையை ஞாபகப்படுத்தியது

யாதும் ஊரே, யாவரும் கேளீர்

- கமல் ஹாசன்

Post a Comment

0 Comments