இந்திய மொழிகளில் தயாராகும் படங்களில், இந்தி சினிமாவுக்கே வியாபார சந்தை
பெரிது.
இந்தி சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எவை? முதல் ஐந்து இடங்களைப் பார்க்கலாம்.
5. ஹேப்பி நியூ இயர்
ஷாருக்கான் நடிப்பில் பராகான் இயக்கிய, ஓம் சாந்தி ஓம் படத்தில்
பணிபுரிந்த ஷாருக், பராகான், தீபிகா படுகோன் மூவரும் மீண்டும் இணைந்த படம்
வெளியான சில தினங்களிலேயே இந்தியாவில் 100 கோடிகளை கடந்தது.
உள்ளூர், வெளியூர் எல்லாம் சேர்த்து இதன் மொத்த வசூல்
383 கோடிகள்.
4. 3 இடியட்ஸ்
இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலில் 200 கோடிகளைத் தாண்டிய படம், 3 இடியட்ஸ். முதலில் 100 கோடிகளைத் தாண்டிய படம், அமீர் கானின் கஜினி.
அமீர் கான், மாதவன் நடித்த 3 இடியட்ஸ் ஓபனிங் வசூலைத் தாண்டி பல வாரங்கள் நின்று ஓடியது. இதன் உள்நாடு, வெளிநாடு வசூல் மொத்தமாக 392 கோடிகள்.
3. சென்னை எக்ஸ்பிரஸ்
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில்
ரோஹித் ஷெட்டி இயக்கிய இந்தப் படம் இந்தியாவில்
மட்டும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இதன் ஒட்டு மொத்த வசூல் 423 கோடிகள்.
2. தூம் 3
தூம் ஒன்று இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றிருந்ததால் மூன்றாவது பாகத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அமீர் கான் வில்லனாக நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது.
தூம் ஒன்று இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றிருந்ததால் மூன்றாவது பாகத்துக்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அமீர் கான் வில்லனாக நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது.
யாஷ்ராஜ்
ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படம் உலகம் முழுவதும் 540 கோடிகளை வசூலித்தது.
1. பிகே
யாரும் அவ்வளவு எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில் பிகே உள்ளது. இது ஓபனிங் ஜோரில் ஓடிய படம் அல்ல. நின்று ஓடிய படம். இந்திய சினிமா சரித்திரத்தில் 300 கோடிகளை முதலில் தாண்டிய படம்.
0 Comments
Comment is awaiting for approval