Ticker

6/recent/ticker-posts

லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின்

சமிபத்தில் நான் படித்த தமிழ் புத்தகம் தஸ்லிமா நஸ்ரின் [Taslima Nasrin] எழுதிய 'லஜ்ஜா - அவமானம்' [Lajja - Shame]. உலகளவில் கடும் எதிர்ப்புகளையும், பாராட்டுகளையும் பெற்ற நாவல். தமிழில் முதல் முறையாக கே.ஜி. ஜவரலால் அவர்களால் மொழிபெர்கப்பட்டு, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை நான் பெங்களூரு புத்தக கண்காட்சியில் வாங்கினேன். 

டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியை தரைமட்டமாக்கினார்கள். சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டபட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வழக்கை, பாபர் மசூதி உடைபிக்கு பிறகு நரகமானது.

இஸ்லாமிய மதவெறி கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கு ஓவ்வொரு இந்துவையும் தேடி பிடித்து தாக்கின. இந்துக்களின் உடைமைகள் நிர்மூலமாக்கபட்டன. ஆயிர கணக்கான இந்து பெண்கள் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டனர் . ஒரு மசூதி உடைப்புக்கு பதிலடியாக ஓராயிரம் தரைமட்டமாக்கபட்டன.

இஸ்லாமிய கட்சிகள், இஸ்லாமிய நண்பர்கள், அரசியல் அமைப்புகள், கம்யூனிஸ்ட்கள் என அணைத்து தரப்பாலும் கைவிடப்பட்ட இந்துகளின் சோகம் உலுக்கி எடுக்கும் வகையில் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது.

எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில்வாழும் சிறுபான்மை இந்துக்களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்து கொல்லபடுகிறார்கள். இந்தியாவில் நடப்பது இந்து முஸ்லிம் கலவரம்.
பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஓழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு.

இந்து சிறுபான்மையின் வேதனை வரலாற்றை எவ்வித பாசாங்கும் இல்லாமல் செய்ய்கிறது தஸ்லிமா நஸ்ரினின் இந்த நாவல்.


Want to write a unique article ?
Click here to start automatically spinning your articles by using the latest Spin Rewriter 5.0 Technology.

Post a Comment

0 Comments