Ticker

6/recent/ticker-posts

மஹிந்திரா லூனா

ஹிந்திரா நிறுவனம் 'Luna' பிராண்டை பதிவு செய்துள்ளது. இதற்குமுன், லூனா பிராண்டை கைனடிக் நிறுவனம் வைத்திருந்தது. ஆனால், சில வருடங்களுக்குமுன், தனது பெரும்பான்மையான பங்குகளை மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டது கைனடிக் நிறுவனம்.

இப்போது, லூனா பிராண்டை மஹிந்திரா பதிவு செய்திருப்பதால், இந்திய சந்தையில் மறுபடியும் லூனா மொபெட்கள் வலம் வரும் என எதிர்பார்க்கலாம்.  

லூனா, லூனா TFR மொபெட்டுகளையும் சமீபத்தில்தான் தன்னுடைய நிறுவனத்துக்கு கீழ் பதிவு செய்தது மஹிந்திரா டூ வீலர்ஸ். 

லூனா மெபெட்-ன் 50 சிசி இன்ஜின், 75 சிசி இன்ஜினாக முன்னேற்றப்பட்டு, புதிய லூனா விற்பனைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. 

லூனா மொபெட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து,விற்பனை செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாம். 

கடந்த ஃபிப்ரவரி மாதம் 64,467 டிவிஎஸ் XL மொபெட்டுகள் விற்பனையாகியுள்ளன. டிவிஎஸ் XLதான் மொபெட் செக்மென்ட்டின் லீடர்.  

நன்றி : அனந்த விகடன்

Post a Comment

0 Comments