Ticker

6/recent/ticker-posts

டி ராமாநாயுடு காலமானார்

பிரபல தமிழ், தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி ராமாநாயுடு [D.Ramanaidu] இன்று ஹைதராபாதில் மரணமடைந்தார்.  அவர் உடல் நலக் குறைவால் நீண்ட காலம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
 
 ராமா நாயுடு ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் கரம்சேடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். திரைப்படத் துறைக்கு வரும் முன் மிகவும் சாதாரண கூலித் தொழிலாளியாக பல வேலைகள் பார்த்தவர் ராமாநாயுடு.

கலைத் துறையில் மிகுந்த ஆர்வம் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். 1962 இல் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவின் படப்பிடிப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் நிர்வாகியாக சில காலம் இருந்தார். அப்போதுதான் திரைப்பிரபலங்கள் பலரும் அறிமுகமாகினர்.

தனது நண்பர் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து தனது மகன் பெயரில் "சுரேஷ் புரொடெக்ஷன்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்ட முதல் திரைப்படமான "ராமுடு பீமுடு' வெற்றிப் படமாக அமைந்தது.

அதன் பிறகு, இந்நிறுவனம் சார்பில் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகின. இவர் 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

2009-ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதாசாஹேப் பால்கே விருது பெற்றார். 2012 இல் இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஒரு தேசிய விருது, 3 முறை பிலிம் பேர் விருது, 5 முறை "நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழில் வசந்த மாளிகை, ரஜினியின் தனிக்காட்டு ராஜா போன்ற பெரும் வெற்றிப் படங்களை தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தார்.
இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் நடிகர் வெங்கடேஷ், சுரேஷ், மகள் லட்சுமி ஆகியோர் உள்ளனர். தெலுங்கு திரையுலகின் பிரபல இளம் நடிகர் ராணா இவரது பேரன் ஆவார்.


Want to write a unique article ?
Click here to start automatically spinning your articles by using the latest Spin Rewriter 5.0 Technology.



Post a Comment

0 Comments