பிரவுசரை
மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாலோ அல்லது புதிதாக ஒரு மாற்று
பிரவுசரை பயன்படுத்தி பார்க்கும் எண்ணம் இருந்தாலோ அதற்கான நேரம்
வந்துவிட்டது என தெரிந்து கொள்ளுங்கள்.
விவால்டி (Vivaldi) எனும் பெயரில் புதிய பிரவுசர்
அறிமுகமாகியிருக்கிறது. பவர் யூசர் என குறிப்பிடப்படும் அதிக அளவில்
இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கானது எனும் அடைமொழியுடன் இந்த பிரவுசர் இணைய
உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணைய உலகில் கூகுளின் குரோம், ஓபன் சோரஸ் பிரவுசரான ஃபயர்பாக்ஸ், ஓபரா உள்ளிட்டவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர ஆப்பிள் பிரியர்களுக்கான சபாரி மற்றும் ஒரு காலத்தில் கோலோச்சிய எக்ஸ்புளோரர் உள்ளிட்ட பிரவுசர்களும் இருக்கின்றன.

இந்நிலையில் விவால்டி எனும் பெயரில் புதிய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. மிகச்சிறந்த பிரவுசர்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ஓபரா பிரவுசரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் சி.இ.ஒ ஜான் வான் டெட்ஸ்னர் (Jon von Tetzchner) தலைமையிலான குழு இந்த புதிய பிரவுசரை உருவாக்கியுள்ளது.
ஒபரா அறிமுகமாகிய காலத்தில் அதில் ஸ்லாகித்து சொல்லப்பட்ட அம்சங்களின் மேம்பட்ட வடிவமாக இந்த புதிய பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. பவர் யூசர் எனப்படும் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் தேவையை மனதில் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக விவால்டி குழு தெரிவித்துள்ளது.
விவால்டியில் இருக்கும் புதிய அம்சங்களாக, இணையத்தில் உலாவும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ’டேப்’களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு வசதியாக இந்த டேப்கள் அனைத்தையும் ஒரு தலைப்பின் கீழ் தொகுத்து வைக்கும் வசதி அமைந்துள்ளது. ஆய்வு நோக்கில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
அதே போல அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை உடனடியாக பயன்படுத்தும் ஸ்பீடு டயல் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இணையத்தை பயன்படுத்தும் போது, பிரவுசரிலெயே அந்த இணையதளங்கள் பற்றி குறிப்பெடுத்து வைக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு இணையதளத்தை ஏன் பயன்படுத்தினோம் என்பதை எப்போது வேண்டுமானாலும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
அதே போல குவிக் கமாண்ட்ஸ் மூலம் பல அம்சங்களை உடனடியாக
பயன்படுத்தலாம். இவை எல்லாமே இணையத்தை அதிகம் பயன்படுத்தும் வழக்கம்
கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரவுசரிடம் இருந்து மேலும் அம்சங்களை எதிர்பார்க்கும் பயனாளிகளுக்காக இந்த புதிய பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன் நிறுவனர் டெட்ஸ்னர் கூறுகிறார்.
இந்த பிரவுசர் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருப்பதால் தற்போது தொழில்நுட்ப முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முழுவடிவம் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த முன்னோட்டத்தை பயன்படுத்தி பார்த்து ஆலோசனைகளை கருத்துக்களாக கூறலாம்.

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10
இயங்குதள அறிமுகத்துடன் ஸ்பார்டன் எனும் பெயரில் புதிய மேம்பட்ட வடிவிலான
பிரவுசர் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்ட நிலையில், இந்த புதிய பிரவுசர்
அறிமுகமாகி மீண்டும் பிரவுசர் யுத்தம் உண்டாகி இருக்கிறது என பேச
வைத்திருக்கிறது.
0 Comments
Comment is awaiting for approval