லெவி ஸ்டாரஸ் [Levi Strauss] லோகோவில் மறைந்துள்ள தகவல்கள்!
ஒவ்வொரு
லோகோவுக்குப் பின்னால் வரலாறே இருக்கும். இன்றைக்கு ஜீன்ஸ் பேண்ட் என்றாலே
லெவி ஸ்டாரஸ் பெயர்தான் நினைவுக்கு வரும். அந்த லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸின்
பின் பக்கமிருக்கும் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள் தான் இது.
![]() |
லெவி ஸ்டாரஸ் |
அமெரிக்கா முழுவதும் தங்க
வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டிக்கொண்டிருந்தபோது இவர் சான்
பிரான்ஸ்சிஸ்கோவில் ஒரு சுரங்கம் அருகே தையல் கடை போட்டார். அப்போது
சுரங்கம் தோண்டுபவர்களுக்காக எளிதில் கிழியாத கூடாரத் துணியில் பேண்ட்
தைத்து கொடுத்தார். இவரே ஜீன்ஸை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இவருடைய
பெயரிலான கம்பெனி ஜீன்ஸே லெவி ஸ்டாரஸ் அண்ட் கோ.
எண் 2 சுட்டிக்காட்டுவது, லெவி ஸ்டாரஸ் நிறுவன
முகவரியை, ஏனெனில் அமெரிக்காவில் நிறைய லெவி ஸ்டாரஸ் என்கிற பெயரில்
ஜீன்ஸ்கள் பவனி வரவே, லெவி ஸ்டாரஸ் தனது நிறுவனத்தின் பெயரை பேடன்ட் வாங்க
முற்பட்டார். அப்போதுதான் அதே பெயரில் வேறொருவர் வாங்கியிருப்பது தெரியவரவே
தனது ஊரான சான் பிரான்சிஸ்கோவையும், மாநிலமான கலிஃபோர்னியாவின் ஆங்கில
எழுத்தான சி.ஏ-வையும் லெவி ஸ்டாரஸ் பெயருக்கு கீழ் இணைத்து காப்புரிமை
வாங்கியுள்ளார்.
எண் 3 சுட்டிக்காட்டுவது, இரண்டு குதிரைகளைக் கொண்டு இழுத்தாலும் லெவிஸ் ஜீன்ஸ் கிழியாது என்பதை உணர்த்துவதற்காக.
எண் 4 குறிப்பிடுவது, இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரின் பிரபல மில்லான அமோஸ்கெக்லிருந்தே லெவிஸ் ஜீன்ஸுக்கான துணிகள் வாங்கப்படுகிறது. அந்த மில்லில் லெவிஸ் நிறுவனத்துக்கான துணி பண்டல் எண் 501 என்றே குறிப்பிடப்படுமாம். 501 எண் கொண்ட துணி வகை வேறு யாருக்கும் விற்பனையில்லையாம்.
எண் 5 குறிப்பிடுவது, கடுமையான துணியினால் செய்யப்பட்ட ஜீன்ஸ் பேண்டை அணிவதற்கு எளிமைபடுத்த காப்பரில் ரிவிட் அடிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
எண் 6 குறிப்பிடுவது, அந்த மான்செஸ்டர் மில்லில் வாங்கப்பட்ட துணி என்பதைக் குறிக்க அந்த மில்லின் காப்புரிமை குறியீடான XX என்பதை குறிக்கிறது.
எண் 7 குறிப்பது, முதல் முதலில் லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு காப்புரிமை வாங்கப்பட்ட தேதியான மே 20, 1873 ஆகும் !
நன்றி : அனந்த விகடன்
0 Comments
Comment is awaiting for approval