உலக மெங்கும் உள்ள சினிமா ரசிகர்ளால் கொண்டாட படும் நட்சதிரம் 'ஜாக்கி சான்'[Jackie Chan]. நகைச்சுவை கலந்த அதிரடி திரைபடங்களில், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடிப்பவர். நட்சத்திரம் மட்டும் அல்லாமல் ஒரு நல்ல மனிதர் என்பதால் உலெகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் அவரை மதிகின்றனர்.
இப்பேற்பட்ட ஒரு உலக புகை பெற்ற நடிகர் இப்போது தன்னுடைய மகனால் நிம்மதி இழந்துள்ளார்.
ஜெய்சீ சான் [Jaycee Chan] , ஜாக்கிசானின் மகன். பாடகரும், நடிகுருமான இவர், [The Twins Effect II ] தி ட்வின் எபக்ட்ஸ் 2 என்ற படத்தின் மூலம் நடிகராகி அறிமுமகமானர்.
ஜெய்சீ சான், இப்போது ஒரு போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளார்.
போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை அவர் வற்புறுத்தியதாக எழுந்த
குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 100 கிராம் எடையுள்ள "மரிஜுவானா" என்ற போதைப்பொருள் அவரது வீட்டில்
இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவர்
போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு கிழக்கு பீஜிங் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெய்சீக்கு ஆறு மாத சிறை
தண்டனையும், 2000 யுவான் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜெய்சீ சிறையில் உள்ளதால் அடுத்த மாதமே
அவர் விடுதலையாகி விடுவார் என்று தெரிகிறது.
0 Comments
Comment is awaiting for approval