Ticker

6/recent/ticker-posts

சி சு செல்லப்பா : வாடிவாசல் [C.S. Chellappa : Vaadivaasal]

C.S. Chellappa : Vaadivaasal

சமீபத்தில் நான் படித்த தமிழ் குறுநாவல் சி சு செல்லப்பா [C.S. Chellappa] அவர்களின் வாடிவாசல் [Vaadivaasal].

இதற்கு முன்பு எனக்கு சி சு செல்லப்பா அவர்களை பற்றியோ , வாடிவாசல் என்ற நாவலை பற்றியோ தெரியாது. அமேசானில் தமிழ் புத்தகங்களை தேடிகொண்டிருந்த போது இந்த புத்தகத்தை பார்த்தேன்.
அது ஒரு  ஜல்லிக்கட்டு கதை என்பதனால் சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று நம்பி நான் வாங்கி படித்த நாவல். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

வாடிவாசல் - காளையையும் காளை அனைபவனையும் பற்றிய ஜல்லிக்கட்டு கதை

இந்த குறுநாவல் பற்றி இந்த புத்தகத்தின் பின் அட்டையில் சொல்லி இருப்பதை நான் இங்கே அப்படியே அளிக்கிறேன்.

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளயாடும் கூட. புய வலு, தொயில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டபட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அனைபவன்.
அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்கு காத்துகொண்டிருக்கும். காளைய்க்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை.

அதை மையமாக வைத்து புனையபட்ட இந்த கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ருபாமாக சித்தரிக்கபட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட.

ஒரு குறிப்பிட்ட வட்டாரத்து பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுத ப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.

இந்த புத்தகத்தை படித்த பிறகு சி சு செல்லப்பா அவர்களின் பிற புத்தங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments