Ticker

6/recent/ticker-posts

பத்மா பூஷன் - கமல் ஹாசன்

இந்த ஆண்டிற்கான பத்மா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பத்மா பூஷன் [Padma Bhushan] விருது வழங்க பட்டுள்ளது.

உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு இந்த விருது தாமதமாகவே வந்துள்ளது. விருதுகளும், பட்டங்களும் உலகநாயகன் கமல் அவர்களுக்கு புதிதல்ல. என்றாலும் அரசு நல்ல திறமை சாலிகளை மற்றும் தான் சார்ந்த துரையின் முன்னேற்றத்துக்கு பாடு பட்டவர்களை சரியான நேரத்தில் கெளரவிக்காமல் போனால் அரசக்கு தான் நஷ்டம்.

பத்மா பூஷன் விருது பற்றி உலகநாயகன் :

வணக்கம்,

பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு, முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும்  இருக்கையில் என் பெயர் பத்மபூஷன் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். 

அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்க்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது, நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு. 

பத்மபூஷன் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த  வாழ்த்துக்கள். முக்கியமாக என் நண்பர் வைரமுத்து அவர்களுக்கு.



பத்மா விருதுகள் பெற்றுள்ள கமல் ஹாசன், வைரமுத்து, லியாண்டர் பயஸ், கோபிசந்த், யுவராஜ் சிங், வித்யா பலன் மற்றும் அனைத்து சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Post a Comment

2 Comments

  1. அனைத்து சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    வாழ்க உலகநாயகன்

    ReplyDelete
  2. very late honour. still congrats sir. kamal deserves more. hope soon govt will honour's the people who deserves it more

    ReplyDelete

Comment is awaiting for approval