Ticker

6/recent/ticker-posts

மீண்டும் 1 ரூபாய் நோட்டு

 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக   ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்ததால் மத்திய அரசு, கடந்த 1994 ஆம் ஆண்டு 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை நிறுத்தியது. அதை தொடர்ந்து 1995 பிப்ரவரியில் 2 ரூபாய் நோட்டும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டு தாள்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மதிப்பில் நாணயங்கள் தயாரித்து வெளியிடப்பட்டன.
சமீப காலமாக நாணயங்களுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை தொடர்ந்து ரூபாய் நோட்டு புழக்கத்தை ஆய்வு செய்த மத்திய அரசு, நாணயங்களுக்கு பதில் மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது என்று முடிவு செய்துள்ளது.

அதன்படி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டு வினியோகத்துக்கு விரைவில் வர உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு அச்சடிக்கும். 2011 நாணய சட்டப்படி இந்த நோட்டுகள் இருக்கும்.

அந்த நோட்டுக்களில் நிதிதுறை செயலாளர் கையொப்பம் இருக்கும். மீண்டும் புழக்கத்துக்கு வர உள்ள 1 ரூபாய் நோட்டுக்கள் பச்சை நிறத்தில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Want to write a unique article ?
Click here to start automatically spinning your articles by using the latest Spin Rewriter 5.0 Technology.

Post a Comment

0 Comments